தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வடிவமைத்துள்ள 'புரோபா-3' எனும் இணை செயற்கைகோள், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட் மூலம் இன்று மாலை 4.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பதாகவும், நாளை மாலை 4.12 மணி பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட் ஏவப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.