நிசார் செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி-எஃப்16 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து தயாரித்த 2,392 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி-எஃப்16 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.40 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நிசார் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் இருக்கும் எனவும், இது பூமியின் மாறிவரும் சூழல்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமர்.
இந்த செயற்கைக்கோள், புவியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து சுற்றுச் சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை அனுப்ப உள்ளது.