ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட் இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
'புரோபா-3' திட்டத்தின் கீழ் சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய இருக்கும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வடிவமைத்துள்ள கரோனாகிராஃப் மற்றும் ஆக்குள்டர் ஆகிய செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட் மூலம் நேற்று மாலை 4.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பதாகவும் இஸ்ரோ அறிவித்தது. இந்த நிலையில், இன்று மாலை 4.04 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கரோனாகிராஃப் மற்றும் ஆக்குள்டர் ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.