சந்திராயன் -3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன் -3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
கடந்த 2008 மற்றும் 2019-ஆம் ஆண்டில் சந்திராயன் -1 மற்றும் சந்திராயன் – 2 விண்ணில் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சந்திராயன் -3 விண்கலம் உருவாக்கும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டது.
நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் -3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுத்தளத்தில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.
சந்திராயன் – 3 விண்கலம் ஜூலை 14-ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்