science

img

சந்திரயான் 3 மூலம் லேண்டரை மீண்டும் நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்!

சந்திரயான் 3 விண்கலத்தின் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் மீண்டும் நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா முதலில் சந்திரயான்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டது. இதை அடுத்து, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ சந்திரயான்-2 என்ற விண்கலத்தை அனுப்பியது. நிலவின் தென் துருவத்தில், விக்ரம் லேண்டரை தரையிறக்க முயன்றபோது, வேண்டரின் தொடர்பை இழந்து செயல்படாமல் போனாது. இருப்பினும், ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் மீண்டும் நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் பணிகள் வரும் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என்றும், சந்திரயான் 3 மூலம் அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்தச் சூழலிலும் தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்படும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.