சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆதித்யா எல்-1 விண்கலம், வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், விண்வெளியில் 40 நாட்கள் பயணித்து, நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள 4-ஆவது நாடாக இந்தியா உள்ளது.
விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக பிரிந்து நிலவின் தென் துருவப் பகுதியில், ஆய்வு செய்து வருகின்றது. இதைத் தொடர்ந்து, சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள ஆதித்யா எல்-1 குறித்த அறிவிப்புகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதித்யா எல்-1 விண்கலம், வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. பி.எஸ்.எல்.வி – C57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.