science

img

அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியது ஆதித்யா-எல் 1

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ கடந்த செப்., 2 அன்று பிஎஸ்எல்விசி - 57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல் 1 விண்  கலத்தை விண்ணில் ஏவியது. தற்போது 4-வது முறையாக ஆதித்யா-எல் 1 விண்  கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும்  பணி செப்., 15 அன்று வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், ஆதித்யா-எல் 1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது.  இதுகுறித்து இஸ்ரோ வெளி யிட்டுள்ள தகவலில்,”ஆதித்யா-எல் 1  விண்கலத்தில் உள்ள ஸ்டெப்ஸ் (STEPS) என்ற கருவி பூமியில் இருந்து 50 ஆயி ரம் கிலோமீட்டர் தொலைவின் இடை வெளியில் செயல்படத் தொடங்கியது. ஸ்டெப்ஸ் கருவியின் சென்சார்கள் அதி வெப்ப மற்றும் ஆற்றல்மிக்க அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளன. மொத்தம் 6 சென்சார்  கள் கொண்ட இந்த ஆய்வு கருவி வெவ்  வேறு திசைகளிலும் தனது ஆய்வு களை மேற்கொள்ளும்” என இஸ்ரோ  தெரிவித்துள்ளது. 

;