science

img

ஆய்வுகளை தொடங்கியது ஆதித்யா-எல்1!

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம், தரவுகளை சேகரிக்கும் பணிகளை  தொடங்கிவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி ஆதித்யா-எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து 125 நாட்கள் பயணம் செய்து இந்த விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது. 
இந்த நிலையில், செப்டம்பர் 10-ஆம் தேதி 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்த போதே ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள STEPS என்ற கருவி செயல்படத் தொடங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த சென்சார் மூலமாக சேகரிக்கப்படும் இந்த தரவுகள், பூமிக்கு 50,000 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள துகள்களை ஆய்வு செய்ய உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.