politics

img

பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்ற முழக்கம் இந்தியா முழுவதும் எழுந்துள்ளது

கோயம்புத்தூர், ஏப்.14-மத்திய ஆட்சியிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற முழக்கம் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கூறினார்.கோவை நாடாளுமன்றத் தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி. ஆர். நடராஜனை ஆதரித்து ஞாயிறன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகை யில், இந்திய நாடாளுமன்றத்திற்கு 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. தற்போது நாடு முழு வதும் பாஜகவிற்கு எதிரான மன நிலை திரும்பியுள்ளது. குறிப்பாக, இந்தியாவை காப்போம், பாஜகவை அகற்றுவோம் என்ற முழக்கம் நாடு முழுவதும் மேலோங்கியுள்ளது. 


எனவே, பாஜக அரசாங்கம் அகற்றப்பட்டு ஒரு மதச்சார்பற்ற அரசு அமையும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அதனால்தான் பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சிகள் மீது அவதூறுகளை அடுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கேட்கிற எந்த கேள்வி களுக்கும் மோடி அரசாங்கம் பதில்கூறவில்லை. பதில் கூறவும் முடிய வில்லை. ஆனால் அவர்கள் மிகக் கேவலமான அவதூறுகளை பரப்பி வருகின்றனர். மேலும், மக்களிடம் பீதியை உருவாக்கி அச்சத்தை உரு வாக்குகிற நிலையை ஏற்படுத்தி வரு கின்றனர். தேசத்தின் பாதுகாப்பு குறைக்கப்படும். பாகிஸ்தானை வைத்து ஒரு அச்சத்தை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இப்படியாக மக்களை மிரட்டி வாக்குகளைப் பெற முடியுமா என பாஜக முயன்று வருகிறது.இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற ஒரு முக்கிய அமைச்சரான ராஜ்நாத் சிங் கூறுகையில், தேசத்துரோக வழக்குகள் எல்லாம் மேலும் வலுப்படுத்தப் படும் என அவர் கூறியிருக்கிறார். மேலும், மோடி அரசாங்கம் எதையும் செய்யவில்லை. அதனால் அவர்கள் அதைச் சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் மக்களைமிரட்டியும், வற்புறுத்தியும் வாக்கு களை கேட்க நினைக்கிறார்கள் இந்தமுயற்சிகள் அனைத்தும் தோற் கடிக்கப்படும். இறுதியில் மக்கள் வெற்றிபெறுவார்கள். மக்கள் தற்போது ஒருமாற்றத்தை விரும்புகிறார்கள். மத்தியில் ஒரு மாற்று ஆட்சியை எதிர் பார்க்கிறார்கள். அதேபோல் தமிழகத்திலும் ஒரு மாற்று ஆட்சியை உரு வாக்க வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கின்றார்கள். இந்த அடிப்படையில் தமிழ்நாட்டு மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு முழுக்க முழுக்க வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.முன்னதாக, இந்தப் செய்தியாளர் சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மேற்கு மண்டலச் செயலாளர் ஜேம்ஸ், மாவட்டநிர்வாகக் குழு உறுப்பினர் தங்கவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;