திருத்துறைப்பூண்டி, ஏப்.9- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிநகர தேர்தல் பணிக்குழு சார்பில் நாகைநாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் எம்.செல்வராசுக்கு வாக்கு கேட்டும், அவரை ஆதரித்தும் சிபிஎம் தேர்தல் அறிக்கை மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேர்தல் அறிக்கையையும் வீடு வீடாகச் சென்று மக்களிடம்கொண்டு சேர்க்கும் பணி திருத்துறைப் பூண்டி நகரம் முழுவதும் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக திருத்துறைப் பூண்டி நகரம் 14,15 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், தி.மு.க சார்பில் தி.ராஜேந்திரன், எஸ்.சக்திவேல், இக்பால், கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.