politics

img

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டம்!

15 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர்.
மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரத்தை விவாதிக்கக் கோரிய மக்களவை எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள் கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், டீன் குரியகோஸ், ரம்யா ஹரிதாஸ், ஹைபி ஈடன் மற்றும் மாநிலங்களவையில் எம்.பி டெரெக் ஓ பிரையன் என மொத்தம் 14 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் கனிமொழி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர்  நாடாளுமன்ற வாயிலில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே எம்.பி.க்கள் பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன் உள்ளிட்டோர் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.