politics

img

அனுமன்தான் முதலில் விண்வெளிக்கு போனதாம்! - அனுராக் தாக்கூருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று மாணவர்கள் மத்தியில் பேசிய பாஜக எம்.பி அனுராக் தாக்கூருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி அனுராக் தாக்குர், தேசிய விண்வெளி நாளையொட்டி, உனாவில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, மாணவர்கள் மத்தியில் ‘அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது, நீல் ஆம்ஸ்ட்ராங் இல்லை’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல, பாஜக-வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.

நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.