சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ண சாமி கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், ஏய் நீ எந்த ஊரு எந்த சாதி என்று கேள்வியெழுப்பினார். இதற்கு செய்தியாளர்கள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் மே 28 அன்று பதவியேற்கின்றனர்.22 சட்டமன்றத் தொகுதி களுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல்18,மே 19 ஆகிய தேதி களில் நடைபெற்றது
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் சிபிஎம் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மற்றும் சிபிஐ முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக மக்களவை உறுப்பினர்களாக வெற்றி பெற்ற கனிமொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் சிபிஎம் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாகை, திருப்பூர் தொகுதிகளில் வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் எம்.செல்வராசு (நாகை), கே.சுப்பராயன் (திருப்பூர்) ஆகியோர் திங்களன்று சென்னை தி.நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வியாழனன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன் ஆகியோர் சந்தித்தனர்.