internet

img

வழக்கம் போல் “பெய்லியர்” ஆன குஜராத் மாடல்

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களை வென்றது.

மாநில வாரியாக பதக்கம் வென்றவர்கள், அதே நேரத்தில் ஒன்றிய அரசிடம் இருந்து பெறும் வசதிகள் மற்றும் பணத்தைப் பார்த்தால் அதிர்ச்சி ஏற்படுகிறது.

பதக்கங்களை வென்ற மாநிலங்கள்:-

ஹரியானா: 44   பஞ்சாப்: 32   மகாராஷ்டிரா: 31   உபி: 21   தமிழ்நாடு: 17   WB: 13   ராஜஸ்தான்: 13   மிசோரம்: 1

குஜராத் எவ்வளவு பதக்கங்களை வென்றது என்று யூகிக்க முடிகிறதா?

குஜராத்: 00

இப்போது விளையாட்டிற்காக இந்த மாநிலங்கள் பெறும் பணத்தைப் பாருங்கள்.

குஜராத்: ₹608 கோடி (அதிகபட்சம்)

ஹரியானா: ₹89 கோடி (குஜராத்திற்கு கிடைப்பதில் 15% மட்டுமே)

குஜராத்தின் நிதியிலிருந்து பணம் எங்கு செல்கிறது என்பது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்.

₹608 கோடி என்பது சாதாரண தொகை அல்ல, நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை விரைவில் சரிசெய்ய வேண்டும்.

மாநில வாரியாகப் பிரிப்பதன் மூலம் பதக்க எண்ணிக்கையை பார்க்கக் கூடாது என்றும் ஒட்டுமொத்த இந்தியாவாக மட்டுமே இருக்க வேண்டும் என்று சிலர் முணுமுணுக்கலாம்,

ஆனால் சரியான தெளிவான தரவுகள் கிடைத்தால் அது மேலும் வளர உதவும்.

 

தகவல்: Amock @Politics_2022_  (X வலைதளம்)

தமிழில்: சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

;