internet

img

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டூடுள் வெளியிட்ட கூகுள்!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆசிரியப் பணியில் முத்திரையைப் பதித்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கி பல்வேறு கல்லூரிகளில் தத்துவப் பேராசிரியராக பணியாற்றியவர். கடந்த 1954-ஆம் ஆண்டு இவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரை கவுரவிக்கும் வகையில், இவரது பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை, கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூகுள் நிறுவனம், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அனிமேஷன் காட்சியில் ஆக்டோபஸ் என்ற கடல்வாழ் உயிரினம் மீன்களுக்கு கணிதம், வேதியல் போன்ற பல்வேறு பாடங்களைக் கற்பிப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.