டிவிட்டரில், இந்தியளவில் இந்தித் திணிப்புக்கு எதிரான ஹேஷ்டேக்கள் டிரெண்டாகி வருகிறது. இதில் ஸ்டாப் இந்தி இம்போசிஷன் (stop hindi imposition) என்ற ஹேஷ்டேக் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ஆம் தேதியான இன்று இந்தி நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, ”இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் தான் முடியும்” என்று டிவீட் செய்துள்ளார். இந்நிலையில், டிவிட்டரில், இந்தித் திணிப்புக்கு எதிரான ஹேஷ்டேக்கள் டிரெண்டாகி வருகிறது. இதில் ’ஸ்டாப் இந்தி இம்போசிஷன்’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்திலும், உலகளவிலும் டிரெண்டாகி உள்ளது. அதே போல், ”ஸ்டாப் இந்தி இம்பெரியலிசம்” (stop hindi imperialism) மற்றும் ”தமிழ் வாழ்க” போன்ற ஹேஷ்டேக்களும் டிரெண்டாகி வருகிறது.