internet

img

மைக்ரோசாப்ட் எட்ஜ் பயனர்களை எச்சரிக்கும் கூகுள்!

மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் பயன்படுத்தும் பயனர்களுக்கு, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்தும் பயனர்களுக்கு, கூகுள் குரோம் உலாவியின் நீட்சிகளை தரவிறக்கம் செய்யும்போதே இந்த எச்சரிக்கை செய்தி காண்பிக்கப்படுகின்றது. மைக்ரோசொப்ட் எட்ஜ் உலாவியில் கூகுள் நீட்சிகளும் பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்ட நிலையிலேயே இவ்வாறான செய்தி பயனர்களுக்கு காட்சிப்படுத்தப்படுகின்றது.

பயனர்களின் பாதுகாப்பு கருதியே “Google recommends switching to Chrome to use extensions securely” எனும் செய்தி காண்பிக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக கூகுள் குரோம் பிரவுசரை பயன்படுத்துபவர்களுக்கு இவ்வாறான எச்சரிக்கை செய்திகள் எவையும் காண்பிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு நடவடிக்கையினை மைக்ரோசொப்ட் நிறுவனமும் மேற்கொண்டிருந்தது. அதாவது 2018 ஆம் ஆண்டு விண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த வேளையில் பயனர்கள் கூகுளின் குரோம் பிரவுசரை தரவிறக்கம் செய்யும்போது எச்சரிக்கை செய்தி காண்பிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.