ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கு புதிய வசதி ஒன்றை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது.
குறுஞ்செய்திகளின் ஊடாகவும், மின்னஞ்சல்களின் ஊடாகவும் ஸ்பேம் எனப்படும் கணினியை பாதிக்கக்கூடிய அல்லது தகவல்களை திரட்டக்கூடிய புரோகிராம்கள் அனுப்பப்படுகின்றன. அன்ரோயிட் சாதனங்களில் ஸ்பேம்களை அனுப்புவதற்கு கூடுதலாக குறுஞ்செய்தி சேவையை ஹேக்கர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே குறுஞ்செய்தி சேவையின் ஊடாக ஸ்பேம்கள் அனுப்பப்படுவதை தடுப்பதற்கு கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு ஸ்பேம்களை உள்ளடக்கிய குறுஞ்செய்திகள் வந்தால், இந்த ஸ்பேம் பாதுகாப்பு வசதி எச்சரிக்கக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன் ஸ்பேம் தொடர்பான குறுஞ்செய்திகள் தொடர்ந்து அனுப்பும் எண்களை கூகுள் ப்ளாக் செய்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.