கிரிக்கெட் ரசிகர்களுக்காக வாட்ஸ்அப்பில் தற்போது ஐபிஎல் ஸ்டிக்கர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றை டவுன்லோடு செய்தபின் பயனர்கள் அவற்றை பிறருக்கு அனுப்ப முடியும். இந்நிலையில், ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு அதிகாரப்பூர்வ கிரிக்கெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது.
இவற்றை பயனர்கள் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த பேக்களில் கிரிக்கெட் சார்ந்த பல்வேறு ஸ்டிக்கர்கள் இடம் பெற்றிருக்கும். புதிய ஸ்டிக்கர்கள் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இவை வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.19.115 பதிப்பில் பெறலாம். மேலும், ஐபோன் பயனர்களுக்கும் இந்த ஸ்டிக்கர்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.