internet

img

பேஸ்புக் மெசஞ்சரில் ப்ரோஃபைலை லாக் செய்யும் வசதி அறிமுகம்

பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் ஐஒஎஸ் பதிப்பில், ப்ரோஃபைலை லாக் செய்யும் வசதி பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.  

இந்த அம்சம் கொண்டு ஐபோன் பயனர்கள், தங்கள் மெசஞ்சர் செயலியை டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி மூலம் லாக் செய்ய முடியும். இந்த அம்சம் முதற்கட்டமாக சில ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும். பயோமெட்ரிக் முறையில் இயங்கும் புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில், இதே அம்சம் தற்சமயம் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் தனிநபர் சாட்களுக்கு பொருந்தாது. இது ஒட்டுமொத்த செயலிக்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.