பாதுகாப்பு காரணமாக, ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரை உடனடியாக அப்டேட் செய்யும்படி மோசில்லா நிறுவனம் பயனர்களை எச்சரித்துள்ளது.
ஸீரோ-டே (Zero-day) என்னும் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை கண்டுபிடித்த மோசில்லா நிறுவனம், ஃபயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஃபயர்பாக்ஸ் இஎஸ்ஆர் (Firefox ESR) ஆகியவற்றை பயன்படுத்தும் பயனர்களை அப்டேட் செய்யும்படி எச்சரித்துள்ளது. இதன் மூலம், வேறு ஒருவர் ஃபயர்ஃபாக்ஸ் பயனாளர்களின் கணினியில் உள்ள கோடை எளிதில் மாற்ற முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபயர்பாக்ஸ் 67.0.3 (Firefox 67.0.3) மற்றும் ஃபயர்பாக்ஸ் இஎஸ்ஆர் 60.7.1 (Firefox ESR 60.7.1) ஆகிய அப்டேட்களை மோசில்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பயனர்கள் ஃபயர்பாக்ஸை ரிஃப்ரெஸ் செய்தாலே அப்டேட் ஆகும் வகையில் இந்த அப்டேட்கள் எளிமையாக மாற்றியமைத்துள்ளது.