internet

img

உலகில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்படும் ஆண்ட்ராய்ட் செயலி வாட்ஸ்அப் முதலிடம் - சென்சார் டவர்ஸ் ஆய்வு தகவல்

உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் என்று சென்சார் டவர்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் உலகம் முழுவதும் கடந்த 2018-ல் மட்டும் 205.4 பில்லியன் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக செயலிகளை பதிவிறக்கம் செய்வதில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் வாட்ஸ்அப உள்ளது. உலகம் முழுவதும் 75.81 மில்லியன் பேர் இதைத் பதிவிறக்கம் செய்துள்ளனர். இரண்டாவது இடத்தில் ஃபேஸ்புக் மெசஞ்சர் உள்ளது. இதை 50.3 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதையடுத்து, டிக்டாக் செயலியை உலகம் முழுவதும் 26.17 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.