india

img

மும்பை: அந்தரத்தில் என்ற மோனோ ரயில்! பயணிகள் பத்திரமாக மீட்பு!

மும்பையில் மின்தடை காரணமாக மோனோ ரயில் பாலத்தின் மேலே நடுவழியில் நின்றது. ரயிலில் சிக்கிய பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மும்பையில் பெய்து வரும் கனமழையால், ரயில் சேவை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. இந்நிலையில், மும்பை, மைசூர் காலனி ரயில் நிலையம் அருகே மோனோ ரயில் சென்று கொண்டிருந்தபோது, நடுவழியில் திடீரென நின்றது.  அதிகளவு மக்கள் ரயிலில் ஏறியதால் , மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரயில் நின்றுள்ளது.

மோனோ ரயிலில் சிக்கிய பயணிகளை தீயணைப்பு படையினர் கிரேன் உதவியுடன் மீட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மோனோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள முதல்கட்ட அறிக்கையில், வழக்கத்தைவிட ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் ரயிலின் எடை 109 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. இது ரயிலின் இயல்பான எடை தாங்கும் திறனாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 104 மெட்ரிக் டன் அளவைவிட அதிகம்.

இதன் காரணமாக, மின் வழித்தடத்தில் துண்டிப்பு ஏற்பட்டு ரயில் பாதியில் நின்றது. நல்வாய்ப்பாக எவ்வித உயிர்சேதமின்றி அனைத்து  பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் தொடர்ச்சியாக அவ்வப்போது ரயில் விபத்து ஏற்பட்டு பெரும் உயிர் சேதத்தை உண்டாக்கிய நிலையில், தற்போது நடைபெற்ற இச்சம்பவத்தால் பலரும் அச்சமடைந்தனர்.