எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.2,000 கோடி மோசடி செய்த வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் அதன் அதன் பிரதான பங்குதாரர் அனில் அம்பானி ஆகியோரை "மோசடி" என ஸ்டேட் வங்கி 13.06.2025 அன்று வகைப்படுத்தி இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையின் தகவல் வெளியீட்டு விதிகளின்படி ஸ்டேட் வங்கியின் மோசடி வகைப்படுத்தலுக்கு தான் ஆளாகி இருப்பதை 01.07.2025 அன்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திடமிருந்து ஸ்டேட் வங்கிக்கு வர வேண்டிய கடன் தொகை மட்டுமே ரூ.2227.64 கோடிகள் (வட்டி இதர செலவுகள் 26.08.2016 லிருந்து சேரும்) மற்றும் நிதி அல்லாத வங்கி உத்தரவாதம் ரூ.786.52 கோடிகள் என இது குறித்து தகவலை நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கியின் புகாரின் பேரில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானி மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.