india

img

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் பணி ஓய்வு!

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுரேகா யாதவ், வரும் செப்.30ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாரா மாவட்டத்தில் விவசாய் குடும்பத்தை சேர்ந்தவர் சுரேகா யாதவ். 1989ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் துணை ஓட்டுநராக பணியில் சேர்ந்த இவர் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே முதல் பெண்  ரயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்டார். 1996-இல் சரக்கு ரயில் ஓட்டுநரானர். 2000-ஆம் ஆண்டில் பயணிகள் ரயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்டார். 

ரயில்வேயில் 36 ஆண்டுகள் பணியாற்றிய சுரேகா யாதவ், வரும் செப்.30ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவருக்கு நேற்று பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.