india

img

துணை ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு!

துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 21 வரை வேட்பு மனுத் தாக்கல்; வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி கடைசி நாள்; தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அதே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.