india

img

ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்கள் தள்ளுபடி!

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளின் கடன் தள்ளுபடி, 2024-25 ஆம் நிதியாண்டில்  ரூ.91,260 கோடியாகவும், கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.1.15 லட்சம் கோடியாகவும் இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2020-21 ஆம் நிதியாண்டில் வாராக் கடன் தள்ளுபடி ரூ.1.33 லட்சம் கோடியாக இருந்தது. 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.1.16 லட்சம் கோடியாகவும், 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.1.27 லட்சம் கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.