டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பு குறித்தான அமைச்சர் பியூஸ் கோயல் சமர்த்தித்த அறிக்கை முதுகெலும்பற்றதாக இருக்கிறது என சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டங்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
டிரம்ப் தன்னை உலகிற்கே ஜனாதிபதி என நினைத்துக்கொண்டு பிற நாடுகளின் விதிமுறைகளை தீர்மானிக்க முனைகிறார். இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்ற அவரது அச்சுறுத்தல் குறித்து இன்று மக்களவையில் அறிக்கை சமர்பித்த அமைச்சர் பியூஸ் கோயல் முதுகெலும்பற்ற அறிக்கையை சமர்பித்தார்.
நம்முடன் கைகுலுக்காவிட்டாலும் பரவாயில்லை, நம் கையையே முறிக்கிறார் டிரம்ப். ஆனால் சிரித்துக்கொண்டே தங்களின் விசுவாசத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது ஆளுங்கட்சி.இந்தியப் பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கையின் மீது கூட்டு தாக்குதலை நடத்துகிறது அமெரிக்கா. அதனை உறுதியோடு எதிர் கொள்ள வேண்டும். அதுவே இந்தியாவைக் காக்கும். என ஒன்றிய அரசின் பொறுப்பற்ற செயல் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.