headlines

img

ஆப்பிள் சாகுபடிக்கு சாவுமணி!

ஆப்பிள் சாகுபடிக்கு சாவுமணி!

 இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத் தால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்பட மாட் டார்கள் என்றும் விவசாயிகளின் நலன் பாது காக்கப்படும் என்றும் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடர்ந்து கூறிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் அது உண்மையல்ல என்பது இந்திய விவசாயிகளின் கதறல்கள் மூலம் அம்பலப் பட்டுக் கொண்டேயிருக்கிறது. 

ஆப்பிள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் ஏழாமிடத்தில் உள்ளது. இந்திய ஆப்பிள் உற்பத்தியில் ஜம்மு-காஷ்மீர் சுமார் நான்கில் மூன்று பங்கு (70%) என முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் கணிசமாக வும் உத்தர்கண்ட், நாகாலாந்து, சிக்கிம், அரு ணாச்சல், தமிழ்நாடு (நீலகிரி) ஆகியவை உள்ளன.

காஷ்மீரில் 7 லட்சம் குடும்பங்கள், 35 லட்சம் பேர் எனவும் இமாச்சலில் 3 லட்சம் பேரும் நேரடி யாகவும் மறைமுகமாகவும் ஆப்பிள் சாகுபடி யில் பங்கேற்கிறார்கள். இங்கு அதிக அடர்த்தி சாகுபடி அதிகளவில் இல்லை. வெளி நாடுக ளிலோ அவை அதிகம். இங்கு ஹெக்டேருக்கு 7-8 டன் தான் உற்பத்தி. அங்கு 40-70 டன் வரை மகசூல் கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, நியூசிலாந்து போன்றவற்றில். இங்கு சிறு விவ சாயிகள். அங்கு பண்ணை விவசாயம் அதாவது 50 ஹெக்டேர் அளவுக்கு தோட்டங்கள்.

அமெரிக்கா, அந்நாட்டு விவசாயிகளுக்கு மானியம் அளித்து உற்பத்திச் செலவை ஈடு கட்டுகிறது. ஆனால் இங்கு ஒன்றிய மோடி அரசு, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை யும் நிறைவேற்றவில்லை. கட்டுபடியான விலைக்காக சட்டப்பூர்வ விலை நிர்ணயமும் செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது போடப்பட்டிருக்கும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப்படி, ஆப்பிள் இறக்குமதி க்கு முந்தைய 50% வரி 25% ஆகக் குறைக்கப் பட்டுவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத் தில் 20 % ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்கள் விலை மலிவாக கிடைக்கும் போது நமது ஆப்பிள்களின் கதி என்னவாகும்? அது மட்டுமின்றி இங்கு சேமிப்புக் கிடங்குகள் அமைப் பது மிக அதிகச் செலவு பிடித்ததாக உள்ளது. காஷ்மீரில் உள்ள 92 கிடங்குகளில் 397.08 லட்சம் டன் தான் சேமிக்க முடியும். எனவே வெளிநாட்டு ஆப்பிள் முற்றுகையை சமாளிக்க நமது விவசா யிகளுக்கு தொழில்நுட்ப உதவி மட்டுமல்லாது வட்டியில்லா கடன் வழங்குவதும் சேமிப்புக் கிடங்கு வசதியை அதிகப்படுத்த முதலீடு செய்வ தும் அவசியம். இல்லையெனில் இந்திய ஆப்பிள் விவசாயிகள் கடன் வலையில் சிக்கி தற்கொலை க்குத் தள்ளப்படுவார்கள்.