india

img

பீமா கோரேகான் வழக்கு: வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃபெரீராவுக்கு ஜாமீன்

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃபெரீரா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த 2018ம் ஆண்டு புனேவில் உள்ள பிமா கோரேகான் எனும் பகுதியில் பெரிய அளவில் தலித் சமூகத்தினர் அணிதிரண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி-மராட்டியர்கள் போரின் 200வது ஆண்டு நினைவு தினத்தை கொண்டாடினர். அப்போது இந்த பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு ஒரு நாள் முன்னதாக 'எல்கர் பரிஷத்' எனும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் நடைபெற்ற போரில் மராத்திய பேஷ்வா படைகளை வெற்றிகொண்டதன் நூற்றாண்டை, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தலித் மக்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று விழாவாக கொண்டாடினர். ஆனால், இந்த விழாவிற்குள் புகுந்த சாதி ஆதிக்கவெறியர்கள், தலித் மக்கள் மீது கொடூர வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். அன்றைய ஆளும் மாநில பாஜக அரசு, சாதி வெறியர்களை கைது செய்யாமல், இவ்விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வரவர ராவ், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, பாதிரியார் ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வ்ஸ், அருண் ஃபெரீரா உள்ளிட்ட 9 மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு உட்பட பல பொய் வழக்குகளை பதிவு செய்தது.  எல்கர் பரிஷத் மாநாட்டில், மேற்கண்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆற்றிய உரைகள் காரணமாகவே, பீமா கோரேகானில் வன்முறை தூண்டிவிடப்பட்டது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு மாவோயிஸ்டுகளின் தொடர்பு  உள்ளதாக கூறி வழக்கு தேசிய புலனாய்வு  முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்டவர்களில் பாதிரி யார் ஸ்டான் சுவாமி தனது 83 வயதில் ஜாமீனே கிடைக்காமல் சிறையிலேயே 2021-ஆம் ஆண்டில் மரணமடைந்தார். சுதா பரத்வாஜூக்கு கடந்த 2021 டிசம்பரில் ஜாமீன் கிடைத்தது. கடந்த 82 வயதான கவிஞர் வரவர ராவிற்கு 2022  ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவக் காரணங் களுக்காக 6 மாத நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 70 வயதான சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகா, புற்றுநோய் பரிசோதனைக்காக கடந்த வாரம் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து, மூன்றரை ஆண்டு களாக சிறையில் இருந்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவிற்கு, மும்பை உயர் நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியது. 
இந்த நிலையில், சமூக செயல்பாட்டாளர்களான வெர்னான் கோன்சால்வ்ஸ் மற்றும் அருண் ஃபெரீரா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம்  இன்று ஜாமீன் வழங்கியது.
 

;