india

img

அதானி குழுமத்துக்கு எதிரான பதிவுகளை நீக்க ஒன்றிய அரசு உத்தரவு!

அதானி குழுமம் குறித்து வெளியிடப்பட்ட 138 வீடியோக்கள் மற்றும் 83 இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்குமாறு இரண்டு ஊடக நிறுவனங்களுக்கும், யூடியூப் சேனல்களுக்கும் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், தில்லி மாவட்ட நீதிமன்றம் கடந்த செப்.16-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பரன்ஜோய் குஹா தாக்கூர்தா, ரவி நாயர், அபீர் தாஸ்குப்தா, ஆயஸ்காந்த் தாஸ், அயூஷ் ஜோஷி உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் ஆதானி குழுமத்தை அவதூறாகக் குற்றம்சாட்டுவதாகக் கூறப்படும் கட்டுரைகளையும் சமூக வலைதள பதிவுகளையும் நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி வைர், நியூஸ்லாண்ட்ரி, எச்.டபிள்யூ நியூஸ் ஆகிய செய்தி நிறுவனங்களுக்கும், ரவீஷ் குமார், அஜித் அஞ்சும், துருவ் ராதே, ஆகாஷ் பானர்ஜி (தேசபக்த்) உள்ளிட்டவர்களும் அதானி குழுமம் குறித்த 138 வீடியோக்கள் மற்றும் 83 இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்கும்படி ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இந்த நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.