india

img

‘ரெட் சமாதி’ நாவலுக்காக புக்கர் பரிசு பெறும் முதல் இந்திய மொழி எழுத்தாளர்!

‘ரெட் சமாதி’ நாவலுக்காக இந்த ஆண்டு எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ புக்கர் பரிசை வென்றுள்ளார்.  

திரைப்படங்களுக்கு ஆஸ்கர் போல, இசைக்கு கிராமி விருது போல இலக்கியத்திற்கு புக்கர் பரிசு பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு சர்வதேச புக்கர் பரிசு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய ரெட் சமாதி என்ற நூலுக்கு கிடைத்துள்ளது. இந்த நாவல் ஆங்கிலத்தில் 'டோம்ப் ஆஃப் சாண்ட்’ என்ற பெயரில் பிரபல மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லால் மொழிபெயர்த்தார்.  

இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக்கதை இது. இந்த நாவல் கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணை பின்தொடர்கிறது.  

இந்த புத்தகத்திற்கு 50,000 பவுண்ட் பரிசுத்தொகை (இந்திய மதிப்பில் சுமார் 49 லட்சம் ரூபாய்) அடங்கிய சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகையை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.  

இந்த விருதின் மூலம் முதன்முறை புக்கர் பரிசு பெறும் இந்திய மொழி எழுத்தாளராகவும், இந்திய முதல் பெண் எழுத்தாளராகவும் கீதாஞ்சலி ஸ்ரீ சாதனை படைத்துள்ளார். 

;