பீகார் தேர்தல் உட்பட இனி வரும் அனைத்து தேர்தல்களிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளரின் புகைப்படம் கலர் புகைப்படமாக இடம்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல்களிலும் இடைத் தேர்தல்களிலும் பயன்படுத்த மின்னணு வாக்குச் சீட்டு வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளரின் புகைப்படம் கலர் புகைப்படமாக இடம்பெறும் என்றும், வேட்பாளரின் பெயர்களும் பெரிய அளவிலான எழுத்தாக இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.