india

img

லடாக் மக்கள் மீதான அடக்குமுறை – சிபிஎம் கண்டனம்

லடாக் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூர அடக்குமுறைக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கண்டனம் தெரிவித்துள்ளார்.

லடாக்கின் லே பகுதியில், மாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பின் 6ஆவது அட்டவணையின் கீழ் லடாக்கை சேர்க்கக் கோரியும் நடத்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடத்த மோதலில், 4 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  இதை தொடர்ந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தவோ, 5 பேருக்கு மேல் ஒன்று கூடவோ கூடாது என பி.என்.எஸ்.எஸ் 163 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். லே மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. 

இந்த நிலையில்,  லடாக் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூர அடக்குமுறைக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“பாஜக மீண்டும் ஆதிவாசிகள், லே மற்றும் திரிபுரா மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. மக்களின் கோபம் தெருக்களில் பிரதிபலிக்கிறது. எனினும், அக்கட்சி அலுவலகங்களை தாக்குவது ஒரு தீர்வாகாது.
லடாக்கில் மக்கள் மீது அரசு கட்டவிழ்த்து விட்ட கொடூரமான அடக்குமுறையை சிபிஎம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த அடக்குமுறையின் விளைவாக நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.