india

img

கோவாக்சின் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திய உலக சுகாதார அமைப்பு

புதுதில்லி, ஏப்.3- கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் விநியோகத்தை உலக சுகாதார நிறுவனம் தற்கா லிகமாக நிறுத்தியுள்ளது.  இதற்கு தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு தொடர்பான எந்த அம்ச மும் காரணம் இல்லை என்று பாரத் பயோடெக் நிறு வனம் தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்றை தடுக்க இந்தியாவில்  கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தி யன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். உலக சுகாதார நிறுவனம் அனுமதியளித்ததை தொடர்ந்து இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடு களில் பலவற்றிலும் கோவாக்சின் பயன்படுத்தப் படுகிறது. உலக சுகாதார நிறுவன அமைப்புகளும் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கி பயன்படுத்தி வந்தன. கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை உலக சுகாதார அமைப்பின் குழுவினர் பாரத் பயோ டெக் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக்குப்பின் பாரத் பயோடெக் நிறுவனம் வெளி யிட்ட அறிவிப்பில், கோவாக்சின் உற்பத்தியை குறைக்க இருப்பதாகத் தெரிவித்தது.  இந்தஅறிவிப்புக்கு அடுத்ததாக, உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் சப்ளையே ஐ.நா வுக்கு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள் ளது. உலக சுகாதார நிறுவனம் கோவாக்சின் விநி யோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ள விவ காரத்தில் தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு தொடர்பான எந்த அம்சமும் இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாக்சின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் எந்த தாக்கமும் இல்லை. கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட கோடிக் கணக்கானவர்களுக்கு, தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் இல்லை. எனவே உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே வழங்கிய தடுப்பூசி சான்றிதழ் இன்னும் செல்லு படியாகும் என்று தெரிவித்துள்ளது.

;