தனியார் மருத்துவமனைக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.225ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏப்ரல் 10 ஆம் தேதிமுதல் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் விலையை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் குறைத்துள்ளது.
அதன்படி கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸின் விலையை ரூ.600லிருந்து, ரூ.225 ஆக சீரம் நிறுவனம் குறைத்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ.1,200லிருந்து ரூ.225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்துள்ளது.
முன்னதாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் தேவை அதிகரித்தபோது அதன் விலையை அதிகரித்துள்ளனர்.
அப்போது தடுப்பூசியை ரூ.255க்கு குறைக்க முடியுமென்றால் அதை ஏன், தேவை அதிகரித்தபோது குறைத்து விற்க வில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.