இந்தியாவில் 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நான்காம் அலை பரவ வாய்ப்புள்ளதாக மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
அதனைதொடர்ந்து, 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இத்துடன் 5 முதல் 12 வயதினருக்கு கோர்பிவாக்ஸ் தடுப்பூசி செலுத்தவும் டிசிஜிஐ அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு சைடஸ் காடில்லா தடுப்பூசி செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை இந்திய அரசின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு வழங்கியுள்ளது.