அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 88.15 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.
இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 விழுக்காடு சரிந்துள்ளது.
மேலும், சீன நாணயத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது.
இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 விழுக்காடு வரி விதித்திருப்பதும் இந்திய ரூபாய் மதிப்புச் சரிவிற்குக் காரணமாக உள்ளது.