india

img

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் பதவி நீக்க நோட்டீஸ் - 193 எம்.பி-க்கள் கையெழுத்து

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பதவி நீக்​கம் செய்​யக் கோரி நாடாளு​மன்​றத்தின் இரு அவைகளிலும் நோட்​டீஸ் வழங்க எதிர்க்​கட்​சி எம்.பி-க்கள் திட்டமிட்டுள்ளனர்.
வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் குளறுபடிகள் மற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதர​வாக தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் செயல்படுகிறார் என எதிர்க்​கட்​சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பதவி நீக்​கம் செய்​யக் கோரி நாடாளு​மன்​றத்தின் இரு அவைகளிலும் நோட்​டீஸ் வழங்க எதிர்க்கட்​சி எம்.பி-க்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த நோட்​டீஸில் 130 மக்​களவை எம்​பிக்​கள், 63 மாநிலங்​களவை எம்​.பிக்​கள் என மொத்​தம் 193 பேர் கையெழுத்​திட்டுள்ளனர்.
வரும் வாரத்தில் இந்த தீர்மானம் நோட்டீஸ் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.