india

img

காயத்ரி மந்திரம் மூலம் கொரோனா குறையுமா? எய்ம்ஸ் ஆய்வுக்கு மோடி அரசு நிதி ஒதுக்கீடு....

ரிஷிகேஷ்:
கங்கை நீர் கொரோ னாவைக் குணப்படுத்துமா? என்று ஆராய்ச்சி செய்யஉத்தரவிட்ட மோடி அரசு,தற்போது காயத்ரி மந்தி ரத்தால் கொரோனாவைக் குணப்படுத்த முடியுமா? என்பதை ஆய்வு செய்வதற்கு, ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மூலம்நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) ஆராய்ச்சியாளர்கள், கடந்த பிப்ரவரி மாதம் முதலே இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது அவர்கள், எய்ம்ஸ் மருத்துவ மனையில் சாதாரண அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளை இரு பிரிவுகளாக பிரித்து, ஒரு பிரிவினருக்கு வழக்கமான சிகிச்சையும், மற்றொருபிரிவினருக்கு காயத்ரி மந்திரங்கள் உச்சரிக்க வைத்து, யோகா பயிற்சிகள் அளிப்பது என்று முடிவு செய்துள்ள னர்.

ஆய்வின் நிறைவில், காயத்ரி மந்திரங்கள் உச்சரிப்பது, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கச் செய்கிறதா? கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்துகிறதா? என்றமுடிவுக்கு வரவுள்ளனர். இதற்காக ஐசிஎம்ஆர் அமைப்பிடம் அவர்கள் விண்ண ப்பமும் அளித்துள்ளனர்.கொரோனா தொற்று தீவிரமடைந்து, நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், காயத்ரிமந்திரம் மற்றும் யோகா பயிற்சி உதவியாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுவ
தாக கூறப்படுகிறது.