அயோத்தி:
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி, மதுரா, வாரணாசி, கோரக்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பாஜகவுக்கு செல்வாக்குள்ள பகுதியாகும். பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்துதான் தொடர்ந்து 2-ஆவது முறையாக எம்.பி.யாகி உள்ளார்.
ஆனால், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அயோத்தி, மதுரா, வாரணாசி, கோரக்பூர் என தங்களுக்கு செல்வாக்கான அத்தனை இடங்களிலும் பாஜகதோற்றது.அயோத்தியில் மொத்தமுள்ள 40 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், 34 வார்டுகளிலும், வாரணாசியில் மொத்தமுள்ள 40 இடங்களில் 33 இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். இதேபோல கோரக்பூர், மதுரா ஆகிய இடங்களிலும் பாஜக தோற்றுப் போனது.இது எப்படி நடந்தது? என்று இப்போதுவரை பாஜக-வினர் குழம்பிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அயோத்தியை ஒட்டிய ராஜன்பூர் கிராமத்திற்கு இஸ்லாமியர் ஒருவர்,ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பாஜகவினரின் அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.அயோத்தியின் ராஜன்பூர் கிராமத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 600. இதில், முஸ்லிம் வாக்காளர்கள் மொத்தமே 27 பேர்தான். எனினும், இங்கு ஹபீஸ் அஜீமுதீன் என்ற இஸ்லாமிய மதகுருவை, மக்கள் தங்களின் ஊராட்சித் தலைzக தேர்ந்தெடுத்துள்ளனர். அஜீமுதீனை எதிர்த்து, இந்து மதத்தைச் சேர்ந்த 5 பேர் போட்டியிட்டுள்ளனர். இருந்தும் அயோத்தியில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் 300 வாக்குகளை பெற்று ஹபீஸ் அஜீமுதீன் வெற்றி பெற்றுள்ளார்.
அஜீமுதீன் ஒரு விவசாயி. மதரஸாவில் படித்து ஹபீஸ் மற்றும் ஆலிம்பட்டங்களைப் பெற்றவர். தற்போது மத அறிஞராக உள்ளார். அவரைத்தேர்ந்தெடுத்தது குறித்து, சேகர் யாதவ் என்ற கிராமவாசி அளித்துள்ள பேட்டியில் ‘நாங்கள் மதத்தின் அடிப்படையில் வாக்களிக்கவில்லை. நமக்கு எது நல்லது என்பதை மட்டுமே மனதில் வைத்திருந்தோம். அதனால்தான் ஒரு முஸ்லிம் மதகுருவை எங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தோம்’ என்று வெகு இயல்பாக கூறியுள்ளார்.
‘மதரசாவில் பயின்றவரான அஜீமுதீனின் தேர்வு இங்கு நிலவும் மதநல்லிணக்கத்திற்கு உதாரணம்’ என்றுதெரிவித்துள்ள சேகர் யாதவ், ‘அஜீமுதீனைத் தோற்கடிக்க பாஜகவினர்செய்த முயற்சி அனைத்தும் வீணாகி விட்டது’ என்றும் குறிப்பிடத் தவறவில்லை.அயோத்தி மசூதி அறக்கட்டளையின் செயலாளர் அதார் உசேன், ‘இதுதான் பன்மைத்துவத்தின் வெளிப்பாடு.இந்தியாவில் கலாச்சார நல்லிணக்கம்பற்றிய சிந்தனை, எல்லா முரண்பாடுகளையும் மீறி வாழ்கிறது என்பதையே இது காட்டுகிறது. நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்பைநாங்கள் மேலும் வலுப்படுத்துவோம்’ என்று நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதனிடையே, தனது வெற்றிகுறித்து பேட்டியளித்துள்ள அஜீமுதீன், 27 வாக்குகளைத் தாண்டி,எனக்குக் கிடைத்த பெரும்பான்மையான வாக்குகள் என்மீதான நம்பிக்கையால் இந்துக்கள் அளித்த வாக்கு என்று கூறியிருப்பதுடன், இந்தவெற்றியை இந்துக்கள் எனக்கு அளித்த ‘ஈத்’ திருநாள் பரிசாக பார்க்கிறேன் என்றும் மகிழ்ச்சி தெரிவித் துள்ளார்.