election2021

img

நந்திகிராமில் மம்தா பானர்ஜி தோல்வி?

கொல்கத்தா:
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி தோல்வியடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தொகுதியில்  ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜியும், இவரை எதிர்த்து அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி பாஜக சார்பிலும்  போட்டியிட்டனர்.  மம்தாவை எதிர்த்து இடதுசாரிகள் கூட்டணி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். 

இதில் வெற்றி பெறுவது மம்தா பானர்ஜிக்கு கவுரவ  பிரச்சனையாக கருதப்பட்டது. வாக்கு  எண்ணிக்கையின் ஆரம்பத்திலேயே மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்தார்.  தொடர்ந்து மம்தா பின்தங்கியதால் அவரது கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். 6 சுற்றுகள் வரை பின்தங்கிய மம்தா, 7-வது சுற்றில் அதிக வாக்குகள் வாங்கினார். அந்தசுற்றின் முடிவில் 2700 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா முன்னிலை பெற்றதால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.ஆனால் இந்த உற்சாகம் கொஞ்ச நேரத்திலேயே புஸ்வாணம் ஆனது. திடீர் திருப்பப்பாக முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி என அறிவிக்கப்பட்டது. மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.

  மம்தா பானர்ஜி பேட்டி
நந்திகிராம் தொகுதி பற்றி கவலைப்பட வேண்டாம். நான் ஒரு இயக்கத்தை எதிர்த்துப்போராடியதால் நான் நந்திகிராமில் சிரமப்பட்டுள்ளேன். அது பரவாயில்லை. நந்திகிராம் மக்கள் எதை வேண்டுமானாலும் தீர்ப்பளிக்கட்டும், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் கவலைப்படவில்லை. நாங்கள் 221 க்கும் மேற்பட்ட இடங்களை வென்றோம். பாஜக தோல்வியை தழுவியது என்று தெரிவித்துள்ளார்.