india

img

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் விண்கல விகாஸ் இன்ஜின் பரிசோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. இந்த வரிசையில் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடாக இந்தியா விரைவில் இடம்பெற உள்ளது. இதற்காக ககன்யான் என்ற பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய திட்டப் பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்குத் தேவையான விகாஸ் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக இன்று நடந்து முடிந்துள்ளது. 240 விநாடிகள் நடைபெற்ற இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளதாக  இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ககன்யான் திட்ட விண்கலத்தில் 3 வீரர்கள் விண்வெளி செல்ல உள்ளனர். ககன்யான் விண்கலம் விண்வெளியில் பூமியைத் தாழ்வான நிலையிலிருந்து 7 நாட்கள் சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்துக்குத் தேவையான கருவிகள், உதிரிப் பாகங்களைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது.