தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர் சந்திப்பில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருப்பதோடு, 2025ஆம் ஆண்டுக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.