india

img

ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடந்தது குலாப் புயல் 

வங்கக் கடலில் உருவான குலாப் புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடந்தது. 

கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கெண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டது. இந்நிலையில், குலாப் எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய பகுதிகளான விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 75 கிலோமீட்டர் முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.