india

img

உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி கடிதம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியதற்காக மாணவர் செயற்பாட்டாளர் உமர் காலித் 2020ஆம் ஆண்டு உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 5 ஆண்டுகளாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். இந்நிலையில் நியூயார்க்கின் முதல் இடதுசாரி மேயராக பொறுப்பேற்றுள்ள ஜோரான் மம்தானி உமர் காலித்துக்கு கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்தத்தை உமர் காலித்தின் மனைவி சமூக ஊடங்களில் பகிர்ந்துள்ளார்.
மம்தானி எழுதியுள்ள அந்தக் கடிதத்தில்,  ”அன்புள்ள உமர், கசப்புணர்வு குறித்தும், அது நம்மை ஆக்கிரமிக்க விடாமல் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.