headlines

img

கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறதா?

கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறதா?

கல்வி நிறுவனங்கள் என்பவை வெறும் கட்டடங்கள் அல்ல; அவை சுதந்திரமான சிந்த னைகளும், மனிதாபிமான விழுமியங்களும் வளர்க்கப்பட வேண்டிய நாற்றங்கால்கள். ஆனால், சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உதவிப் பேரா சிரியர் லோரா சாந்தகுமாரை பணிநீக்கம் செய் துள்ள விதம், ஒரு கல்வி நிறுவனம் எப்படி அதி கார வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக மாறக் கூடாது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

எல்லை மோதல்களின் போது நிகழும் உயிர்ப் பலிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், போரி னால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காக வும் குழந்தைகளுக்காகவும் குரல் கொடுப்ப தும் ஒரு மனிதனின் அடிப்படை அறம். பேரா சிரியர் லோரா சாந்தகுமார் தனது தனிப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட மனிதாபி மானக் கருத்து, ஒரு கல்வி நிறுவனத்திற்கு “தேச விரோதமாகவோ” அல்லது “ஒழுக்கக் கேடாக வோ” தெரிவது வியப்பிற்குரியது. போரை விட அமைதியை நேசிப்பது குற்றமென்றால், நாம் எத்தகைய சமூகத்தை நோக்கிச் செல்கிறோம் என்ற கேள்வி எழுகிறது.

விசாரணைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சிய ளிக்கின்றன. ஒரு பேராசிரியரை “ஆம்” அல்லது “இல்லை” என்று மட்டுமே பதிலளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதும், சக ஊழிய ரின் துணையை மறுப்பதும் ஜனநாயக விரோ தமானது. விசாரணையின் தொடக்கத்திலேயே முடிவை எடுத்துவிட்டு, அதற்குப் பிறகு விசா ரணை நடத்துவது என்பது “நிறுவன ரீதியான வன்முறை” அன்றி வேறில்லை.

பணிநீக்க ஆணையில் கூறப்பட்டுள்ள காரணங்கள் வேடிக்கையாகவும், தர்க்க அறி வற்றதாகவும் உள்ளன. அவர் தனது தனிப் பட்ட முறையில் பதிவிட்டதை ஒப்புக்கொள்ளும்  அதே வேளையில், “அவர் எஸ்ஆர்எம் நிறுவ னத்தைக் குறியிடவில்லை என்று நிரூபிக்க வில்லை” எனக் கூறி தண்டனை வழங்குவது சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே எதிரானது. ஒரு நிறுவனத்தின் மாண்பு என்பது அதன் ஊழியர்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதில்தான் உள்ளதே தவிர, அவர்களைக் கண்காணிப்பதிலும் நசுக்குவதிலும் இல்லை.

160-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், ஆராய் ச்சியாளர்கள் மற்றும் குடிமைச் சமூகத்தினர் இந்தப் பணிநீக்கத்திற்கு எதிராக ஒன்றிணைந் துள்ளார்கள். இது ஒரு தனிநபருக்கான போ ராட்டம் மட்டுமல்ல; கல்வி நிலையங்களில் நிலவ வேண்டிய “கல்விசார் சுதந்திரத்தை” காப்பதற் கான போராட்டம். ஜெயதி கோஷ், அலோக்  லத்தா போன்ற ஆளுமைகளின் கையெழுத்து கள் இந்தச் சிக்கலின் தீவிரத்தை உணர்த்து கின்றன.

உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் எதிர்கொள்ளும் இந்த அநீதி, ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்திற்குமான அச்சுறுத் தல். நியாயமற்ற இந்தப் பணிநீக்கத்தை உட னடியாகத் திரும்பப் பெறவேண்டும்.