headlines

img

அணையும் அடுப்பு! கொழுக்கும் லாபம்!

அணையும் அடுப்பு! கொழுக்கும் லாபம்!

இந்தியாவில் ஒரு பக்கம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் ஏழை களின் வீடுகளில் அடுப்பு அணைந்து கொண்டி ருக்கிறது; மறுபக்கம் இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மலிவு விலை எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வ தன் மூலம் தனியார் நிறுவனங்கள் லாபத்தில் கொழுக்கின்றன. இந்த முரண்பாடு தற்செய லல்ல, திட்டமிட்ட கொள்ளை!

2014-இல் 14.2 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.414. 2026 -இல் ரூ.913. அதாவது 12 ஆண்டுகளில் மொத்தம் 120 சதவீதம் விலை உயர்வு. 2014-க்கு முன்பு வரை அரசு நேரடி யாக எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் கொடுத்தது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ.200–400 வரை மானியம் இருந்தது. குடும் பத்திற்கு 12 சிலிண்டர்கள் வரை மானிய விலை யில் கிடைத்தன.

ஆனால் மோடி அரசு 2014-இல் அறிமுகம் செய்த நேரடி மானியத் திட்டத்தில் முதலில் ரூ. 300–400 மானியம் கிடைத்தது. ஆனால் 2018–2020 காலகட்டத்தில் மானியம் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு, 2022-இல் மானியம் பூஜ்ஜியம் ஆனது.உஜ்வாலா திட்டத்தில் இலவச இணைப்பு பெற்ற 90 லட்சம் பேர் அடுத்த முறை சிலிண்டர் வாங்கவே இல்லை. 1.18 கோடி பேர் இணைப்பு வாங்கியதோடு சரி; இன்றுவரை ஒருமுறை கூட சிலிண்டரை நிரப்பவில்லை.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது அதன் சுமையை மக்கள் தலையில் ஏற்றும் அரசு, விலை குறையும்போது பலனை மக்களுக்குத் தருவதில்லை. மாறாக ‘கலால் வரி’ என்ற பெயரில் பெட்ரோல், டீசல் விலையில் பாதியை வரியாக மக்களிடம் சுரண்டுவது எந்த வகையில் நியாயம்?

சர்வதேச அழுத்தங்களையும் மீறி ரஷ்யாவி டமிருந்து இந்தியா குறைந்த விலைக்குக் கச்சா எண்ணெய்யை வாங்கியது. இது “தேசிய நலன்” என்று கூறப்பட்டது. ஆனால் ரிலை யன்ஸ் மற்றும் நயாரா போன்ற தனியார் நிறுவ னங்கள் தள்ளுபடி விலையில் வாங்கின. அதனை இந்தியாவில் மலிவு விலையில் விற்காமல், ஐரோப்பிய நாடுகளுக்கே அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கின்றன. இதன் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.1,34,000 கோடி கூடுதல் லாபம் ஈட்டின. இத னால் இந்திய மக்களுக்கு பயன் என்ன?

மக்களின் வரிப்பணத்திலும் நாட்டின் வளத்தி லும் வளர்ந்த தனியார் நிறுவனங்கள் உலக நெருக்கடியைப் பயன்படுத்தி கல்லா கட்டுவதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. உள்நாட்டில் எரிபொருள் விலை குறையும் வரை, தனியார் நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்க வேண்டும். ரஷ்ய எண்ணெய்யால் ஈட்டப்பட்ட ‘அதீத’ லாபத்தை முழுமையாக சமையல் எரிவாயு மானியத்திற்கு மடைமாற்ற வேண்டும்.