headlines

img

இதுதான் ‘மேக் இன் இந்தியாவா?

இதுதான் ‘மேக் இன் இந்தியாவா?

’ ரஷ்யாவிடமிருந்து 30 நாட்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள இந்தியா வுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா  திமிர்த்தனமாக கூறுகிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா வின் அனுமதி எதற்கு? என்ற எளிய கேள்வி யாருக்கும் எழவே செய்யும். ஆனால் இது நரேந்திர மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று அவரது அடிப்பொடி ஊட கங்கள் புல்லரித்து எழுதுகின்றன.

ஆனால் அதே  நேரத்தில் ஏற்கெனவே வழங்கியது போல மலிவு விலையில் கச்சா எண் ணெய் வழங்க முடியாது என்றும், சந்தை விலைக்கே தரமுடியும் என்றும் ரஷ்யா கூறியுள்ளதை மூடி மறைக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, ஏற்கெ னவே ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டிருந்தால் உள்நாட்டு சந்தையில் அது ஏன் பிரதிபலிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது

அதற்கான பதில் ரஷ்யாவிடமிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யால் கொழுத்த லாபம் அடைந்தது இந்தியாவின் கார்ப்பரேட் முதலாளியான அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரிபைனரிஸ் நிறுவனமேயன்றி இந்திய மக்கள் அல்ல. இப்போதும் கூட ரிலை யன்ஸ் நிறுவனம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை பெற்று அதை சுத்திகரித்து இந்திய பயன்பாட்டுக்கு அல்ல, எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் அந்நிய செலாவணியை அள்ளிக் குவிக்கிறது.

எண்ணெய் கொள்ளைக்காக வெனிசுலா தலைவர் மதுரோவையும், அவரது இணைய ரையும் அமெரிக்கா வல்லாதிக்கம் அடாவடி யாக கைது செய்த பின்னணியில் வெனிசுலா ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்யவிருப்ப தாக தகவல்கள் வெளியாகின.வெனிசுலாவிலி ருந்து நேரடியாக ரிலையன்ஸ் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா அனு மதி வழங்கியது. இதன்மூலம் ரிலையன்சின் ஜாம் நகர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பெரும் லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரூ.27 லட்சம் கோடி முத லீட்டில் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமெரிக்காவில் நிறுவப்பட இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி யுள்ளார். இதன்மூலம் டெக்சாஸ் மாகாணத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், அமெ ரிக்காவின் எரிசக்தி பாதுகாப்புக்கு அம்பானி யின் முதலீடு உதவும் என்றும் வெள்ளை மாளிகை கருப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை அம்பானி கொண்டு போய் அமெ ரிக்காவில் கொட்டுகிறார். ‘மேக் இன் இந்தியா’ என்பதெல்லாம் பிரதமரின் உதடுகளில் மட்டுமே வழியும் வார்த்தை. அவருடைய கார்ப்பரேட் முதலாளிகள் உலகளவில் சேவை செய்யவே  பிரதமரின் ராஜதந்திரம் உதவுகிறது. போர்ச் சூழலின் பாதிப்பு எல்லாம் எளிய மக்களுக்கு மட்டுமே. கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதனத்திற்கு அல்ல.