சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும் என்றும், சனாதனத்தை ஏலனமாக பார்ப்பவர்களின் கண்களை தோண்டப்படும் என்றும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளர்.
சென்னையில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இதை அடுத்து, அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சாரியா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டு எரித்தும் மிரட்டியுள்ளதோடு, அமைச்சரின் தலையை சீவிக்கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும் என்றும், சனாதனத்தை ஏலனமாக பார்ப்பவர்களின் கண்களை தோண்டப்படும் என்றும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளர். மேலும், சனாதனத்திற்கு எதிராகப் பேசிவிட்டு இனி ஒருவரும் ஆட்சியில் அமர முடியாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.